பொலிஸ் நிலையமாகிறது பளை சோதனை நிலையம்

பளை பொலிஸ் சோதனை நிலையம் இந்த மாத இறுதிக்குள் பொலிஸ் நிலையமாக செயற்படவுள்ளது. இதுவரை காலமும் பொலிஸ் கனிஷ்ட உத்தியோகத்தர் (சார்ஜன்) தலைமையில் 10 பேருடன் இயங்கிவந்த பொலிஸ் சோதனை நிலையம் விரைவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் 80 உத்தியோகத்தர்களுடன் முழுமையான பொலிஸ் நிலையமாக இயங்கவுள்ளது.

இப்பிரதேச மக்கள் இதுவரை காலமும் பொலிஸ் அறிக்கைகள் பெற கிளிநொச்சிக்கு அலைந்து வந்தனர்.

அந்தக் குறை இந்த மாதத்துடன் முடிவுக்கு வரும். பிரதேச மக்கள் இனிமேல் பளை பொலிஸ் நிலையத்தில் அனைத்துச் சேவைகளையும் பெற ஏற்பாடு செய்யப்படும் என்று கிளிநொச்சி மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பீ.ஜீ.சேனதீர தெரிவித்தார்.

பளையில் நடைபெற்ற பளை பிரதேச நடமாடும் சேவையில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

Related Posts