பொலிஸ் நிலையத்தின் முன்பாக வாள்வெட்டு! ஒருவர் காயம்!

நெல்லியடி பொலிஸ் நிலையத்தின் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் காயமடைந்துள்ளார்.

நெல்லியடி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ,இடம்பெற்ற குறித்த வாள்வெட்டு சம்பவத்தில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் இளைஞனே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாளடவெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாகவும், சிசிடிவி காணொலிகளின் அடிப்படையில் ஒருவரை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

Related Posts