பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழை (Police Clearance Reports) பெற்றுக்கொள்வதற்காக அறிவிடப்படும் கட்டணம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டண மறுசீரமைப்பு எதிர்வரும் 5 ஆம் திகதி (2017.11.05)முதல் நடைமுறைக்குவருவதாக பொலிஸ் தமைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது,
பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழை இலங்கையிலிருந்து விண்ணப்பித்து அதனை இலங்கை முகவரிக்கு தபாலில் சேர்க்கும் போது அறவிடப்படும் புதிய கட்டணம் ரூபா 1, 000/=
பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழுக்கு இலங்கையிலிருந்து விண்ணப்பித்து வெளிநாட்டு முகவரிக்கு முகவரிக்கு தபாலில் சேர்க்கும் போது அறவிடப்படும் புதிய கட்டணம் ரூபா 1, 500/=
பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழை பெற்றுக்கொள்ளுவதற்காக இலங்கையிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் ரூபா 1, 500/=