பொலிஸ் தடுப்பிலிருந்த இளைஞன் தற்கொலை முயற்சி!!!

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் பிளேட்டால் தனது கழுத்தை கீறி தற்கொலைக்கு முற்சித்துள்ளார். அந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த மாதம் வீடொன்றுக்குள் புகுந்து தீவைத்தனர் – அடாவடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டப்பட்ட சந்தேகநபர்கள் மூவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் தனது சட்டைப் பைக்குள்ளிலிருந்த பிளேட்டை எடுத்து தனது கழுத்தில் 4-5 முறை தாறுமாறாகக் கீறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

சம்பவத்தையடுத்து சந்தேகநபரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மானிப்பாய் பொலிஸார் சேர்த்தனர். இளைஞனுக்கு சத்திர சிகிச்சை கூடத்தில் காயங்களுக்கு தையல் போடப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

சந்தேகநபரைக் கைது செய்து அவரது உடமையில் உள்ள பொருள்கள் தொடர்பில் சோதனை செய்து கைப்பற்றாமல் அவரை தடுப்பில் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர் விசாரணக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

Related Posts