பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல்; சந்தேகத்தில் மூவர் கைது

arrest_1பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 3 பேரை கைது செய்தள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி விக்கிரமாரச்சி தெரிவித்தார்.

யாழ். குருநகர் பகுதியில் கடந்த டிசெம்பர் மாதம் 24ஆம் திகதி இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலின் போது, அதனைத் தடுக்க முற்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டின் பேரில் சம்பவ தினத்துக்கு மறுதினம் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே மேலும் மூவர் இன்றைய (07-01-2013) தினம் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் அதிகாரி மேலும் கூறினார்.

Related Posts