பொலிஸ் சாஜன்டை தாக்கிய இருவர் கைது

boys-fight-cartoonயாழ். பொலிஸ் நிலைய பொலிஸ் சாஜன்டை தாக்கிய இருவரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ். மின்சார நிலைய வீதியில் வெள்ளி மதியம் 3.30 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த பொலிஸ் சாஜன்ட் தனிப்பட்ட தேவைக்காக சிவிலில் மின்சார நிலைய வீதிக்கு சென்று கொண்டிருந்த வேளையில், பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த இருஇளைஞர்கள் தனிப்பட்ட பிரச்சினை நிமித்தம் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த இளைஞர்கள் இருவரும் யாழ். பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Related Posts