Ad Widget

பொலிஸ் என அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல்

துன்னாலை ஆட்டுப்பட்டித் தெருப்பகுதியில் பொலிஸ் என பொறிக்கப்பட்ட ரீசேட் அணிந்து கொண்டு மக்களை அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்ட இளைஞர் ஒருவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை காலை அப்பகுதியில் சுன்னாகம் பொலிஸ் எனப் பொறிக்கப்பட்ட ரீசேட்டினை அணிந்து கொண்டு 33 வயதுடைய இளைஞர் ஒருவர் அப்பகுதி மக்களை அச்சுறுத்தும் விதத்தில் நடந்துள்ளார்.

இது தொடர்பில் நெல்லியடிப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் அவரைக் கைது செய்து பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related Posts