பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதில் பிரச்சினை இல்லை – வாசு­தேவ நாண­யக்­கார

வட­மா­காண சபைக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கு­வதில் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. அவ்­வாறு அரசு தீர்­மானம் எடுத்தால் அதனை வர­வேற்­ப­தாக அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

vasu-theva-nanayakkara

இன­வா­தி­களை ஓரம்­கட்­டி­விட்டு தமிழ் மக்­க­ளுக்கு சம உரி­மை­களை வழங்கி நல்­லி­ணக்கஆணைக்­ கு­ழு வின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்ற வேண்­டு­மென்றும் அமைச்சர் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக சமூக ஒரு­மைப்­பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்­பான அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார மேலும் தெரி­விக்­கையில், போக்­கு­வ­ரத்து மற்றும் சிறு சிறு குற்­றங்கள் தொடர்­பான முறைப்­பா­டு­களை கையாளும் பொலிஸ் அதி­கா­ரங்­களை மாகாண சபை­க­ளுக்கு வழங்­கு­வது வர­வேற்­புக்­கு­ரி­யது.

விஷே­ட­மாக வட மாகா­ணத்­திற்கு இவ்­வா­றான பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்கி பரீட்­சார்த்­த­மாக அம் மாகா­ணத்தின் செயற்­பா­டு­களை அவ­தா­னிக்க முடியும்.

இவ்­வாறு பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கப்­படும் போது பொலிஸ் ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட வேண்டும்.

அவ் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரா­கவும் அக்­கு­ழுவின் அதிக அதி­கா­ர­மு­டை­ய­வ­ரா­கவும் ஜனா­தி­ப­தியே இருப்பார். எனவே பொலிஸ் அதி­கா­ரங்­களை மாகாண சபைகள் தவ­றான வழியில் பயன்­ப­டுத்த முனைந்தால் அதனை ஜனா­தி­ப­தியால் மீளப் பெற­மு­டியும்.

எனவே இன­வா­திகள் சொல்­வதைப் போன்று பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கினால் வட மாகாணம் பிரி­வி­னைக்­கான வழியை தயார்­ப­டுத்தும் என்­பதில் உண்­மை­யில்லை.

மாகாண சபையை அறி­மு­கப்­ப­டுத்தும் போதும் அதி­கா­ரத்தை பர­வ­லாக்­கிய போதும் இந்­திய வம்­சா­வளி மக்­க­ளுக்கு இலங்கை பிர­ஜா­வு­ரிமை வழங்­கிய போதும் சிங்­கள இன­வாதச் சக்­திகள் அவற்றை எதிர்த்­தன. தமிழ் மக்­க­ளுக்கு எந்த உரி­மை­யையும் வழங்கக் கூடா­தென்­பதே இக்­கூட்­டத்தின் பிறவிக் குண­மாகும்.

இதனை மாற்ற முடி­யாது. எனவே இன­வா­தி­களின் கருத்­துக்­களை கவ­னத்தில் எடுக்­காது தமிழ் மக்­க­ளுக்கு சம உரி­மை­களை வழங்க ஜனா­தி­பதி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

அத்­தோடு நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­க­ளையும் நிறை­வேற்ற வேண்டும். அவ்­வா­றா­னதோர் நிலையில் எம்­மீ­தான சர்­வ­தேச அழுத்­தங்­களும் நீர்த்துப் போகும். அத்­தோடு இந்­தி­யாவின் பிர­தமர் மோடி ஒரு போதும் ஜெய­ல­லி­தாவின் கோரிக்­கையை ஏற்க மாட்டார்.

ஏனென்றால் இந்­தியா எப்­போதும் இலங்­கையின் இறை­யாண்­மையை மீறாது மதிப்­ப­ளிக்கும். எனவே ஜெய­ல­லி­தாவின் கோரிக்­கைக்கு மோடி செவி சாய்க்க மாட்டார்.

இலங்­கையில் பிரி­வி­னைக்கு தமிழ் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டுமெனக் கூறும் ஜெயலலிதா அப்படியானால் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுடன் இணைந்து வாழ்வதற்கும் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டுமென கூற வேண்டும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Related Posts