கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் உள்ள கிராம சேவையாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் சிவில் குழுக்களுடனான சந்திப்பொன்றில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பொலிஸ்மா அதிபர் நேற்று கலந்து கொண்டார்.
குறித்த சந்திப்பு நேற்று மாலை கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது.
பொலிஸ்மா அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், பொலிஸ் உப குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tweet