பொலிஸார் மீது தாக்குதல்: துப்பாக்கியும் அபகரிப்பு

சப்புகஸ்கந்த பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு ரோந்து சென்ற பொலிஸார் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

police-ajith-horana

அந்த நபர்கள், பொலிஸ் உத்தியோகத்தரிமிருந்த துப்பாக்கியையும் அபகரித்து சென்று விட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்தார்.

ரோந்து சேவையில் முதலில் பொலிஸார் இருவர் சென்றதாவும் அதற்கு பின்னர் மேலும் இரண்டு பொலிஸார் சென்றதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Posts