பொலிஸார் பாராபட்சம்!

மாங்குளம் செல்வபுரம் முறிகண்டி பிரதேசத்தில் பெண்ணொருவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட சிலருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் வசிக்கும் வீட்டிற்கு முன்பாக வெள்ளை வான் ஒன்றில் வருகை தந்த சிலர் மது போதையில் அந்த பெண்ணை அச்சுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் மாங்குளம் பொலிசாரிடம் முறைப்பாடு செய்த போதிலும் அவர்கள் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts