பொலிஸார் துரத்த மோட்டார் சைக்கிள் ஒடியவர்கள் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில்

சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி இளைஞர்களை கொடிகாமப் பொலிஸார் மறித்துள்ளனர். எனினும் இவர்கள் நிற்காமல் மோட்டார் சைக்கிளைச் வேகமாக செலுத்திச் சென்றுள்ளனர்.பொலிஸார் இவ் இளைஞர்களைப் பிடிப்பதற்காகச் துரத்திச் சென்றுள்ளனர். இதனை அறிந்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளைச் வேகமாக செலுத்திச் சென்றுள்ளனர்.

இவ்வேளை முன்புறமாகச் சென்று கொண்டிருந்த லான்மாஸ்டருடன் இவர்களின் மோட்டார்சைக்கிள் மோதிவிபத்துக்குள்ளாளது.இதனால் பலத்த காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர்.

Related Posts