பொலிஸாருக்கு கஞ்சா விற்க முற்பட்டவர் கைது

1 கிலோ 800 கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த மணல்காடு பிரதேசத்தினை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனை, உப்புவல்லை பகுதியில் வைத்து சனிக்கிழமை (31) கைதுசெய்துள்ளதாக, காங்கேசன்துறை குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

சிவில் உடையில் சென்ற பொலிஸார், சந்தேகிக்கப்பட்ட இளைஞன் ஒருவரிடம் தாமும் கஞ்சா வாங்குவது போல் பாசாங்கு செய்து அவரைக் கைதுசெய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக இளைஞன், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளான்.

Related Posts