பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் காயம்!

மாங்குளம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது;-

மாங்குளம், ஐயன்குளம் பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் பொலிஸார் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமான இளைஞன் ஒருவனை சோதனையிட்டபோது அவரது பையில் கஞ்சா இருந்துள்ளது.

இதனையடுத்து அந்த இளைஞனை கைது செய்யமுற்பட்ட போது அவர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதன்போது பொலிஸார் சுட்டதில் அவர் காலில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் இரவு 11 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் புத்தூர், ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி தர்சுதன் (வயது 26) என்பவரே காயமடைந்தார்.

Related Posts