பொலித்தீன் பாவனைக்கு ஜனவரி மாதம் முதல் தடை!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பொலித்தீன் பொதிகள், பைகள் மற்றும் அவை சார்ந்த உற்பத்திகளை பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் தடைசெய்யப்படவுள்ளது.

பொதுமக்களின் ஆரோக்கியத்தினையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடனே இவ்வாறான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

20 மைக்ரோன்களுக்கு குறைவான கனவளவை கொண்ட பொலித்தீன் பொதிகள், பயன்பாட்டிற்கே எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் தடையுத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. தடையுத்தரவுகளை மீறி பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் தண்டப்பணமாக ரூ 10,000 விதிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் இல. 1466/5 இன் 23W பிரிவின் கீழுள்ள தேசிய சுற்றாடல் சட்டம் இல 47 of 1980 இன் கீழேயே 20 மைக்ரோன்களுக்கு குறைவான கனவளவை கொண்ட பொலித்தீன் பொதிகள் பயன்பாடு தடைசெய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதய ஜனாதிபதி சுற்றாடல் அமைச்சராக பதவி வகித்த காலமான கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொலித்தீன் பாவனைக்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும் செயற்பாட்டு ரீதியில் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts