பொலிடிக்கல் த்ரில்லர் படமாக கோ-2

பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, பாலசரவணன் முதலானோர் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரத் இயக்கியிருக்கும் படம் ‘கோ-2’. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படம் பொலிடிக்கல் த்ரில்லர் படம். குறிப்பாக, அரசியல் கட்சியை கடுமையாக சாடும் இப்படம் கடந்த வருடமே வெளியாகி இருக்க வேண்டிய படம். படத்தில் ஆளும்கட்சியை கடுமையாக தாக்கி காட்சிகளும், வசனங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கோ-2 படத்தை வெளியிடுவதில் தயாரிப்பாளருக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டதால், படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

ko-2

தற்போது தேர்தல் நெருங்கிவிட்டதால் கோ-2 படத்தை வெளியிட இதுவே சரியான தருணம் என்று முடிவு செய்து, கோ 2 படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

தேர்தல் முடிந்து புதிய ஆட்சி வந்துவிட்டாலும் கோ-2 படத்தை வெளியிடுவதில் பிரச்சனை வரும் என்பதால் எப்படியாவது அதற்கு முன் படத்தை வெளியிட பகீரத பிரயத்தனங்கள் செய்து வருகிறார் எல்ரெட் குமார்.

தற்போதைய நிலவரப்படி கோ-2 படத்தை ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதே நாளில் தான் ‘மனிதன்’ திரைப்படத்தையும் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அவரது படங்கள் வெளியாகும் தினத்தில் வேறு படங்கள் வெளியானால் சத்தியமாக தியேட்டர்கள் கிடைப்பதில் தடங்கல்கள் உண்டாக்கப்படும். எனவே ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு முன்னதாக அல்லது ஒரு வாரம் கழித்து கோ-2 படத்தை ரிலீஸ் செய்யலாமா என யோசித்து வருகிறார் எல்ரெட் குமார்.

Related Posts