பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சர் சுவாமிநாதன் கோரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைத்து கொடுக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலகங்களின் ஊடாக பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வவுனியா, கற்பகபுரம் கிராமத்தில் 370 குடும்பங்களுக்கு மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி;எம். சுவாமிநாதனால் காணி உறுதிப்பத்திரங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

கற்பகபுரம் கிராமத்தில் குடியிருந்த மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மீள்குடியேற்றப்பட்டனர்.

இவ்வாறு குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கான காணி உறுதிப்பத்திரங்களை வழங்குமாறு தொடர்ச்சியாக கோரி வந்த நிலையில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நல்லாட்சி அரசாங்கம் வவுனியாவில் காணிகளற்ற மக்களுக்கு மேலும் காணிகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Related Posts