பொருத்து வீடுகளைப் பெற வடக்கு மக்கள் முண்டியடிக்கிறார்கள்

கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாதிரி பொருத்து வீடுகள் போன்ற, வீட்டுத் திட்டத்தைப் பெறுவதற்கு வடக்கிலுள்ள மக்கள் முண்டியடிப்பதாகத் தெரிவித்துள்ளார் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.

“மாதிரி வீடுகளைப் பார்வையிட்ட பின்னர், யாழ்ப்பாண மாவட்டத்தில், இந்த வீடுகளைப் பெறுவதற்கு, 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அதுபோன்று வவுனியா மாவட்டத்திலும், 8,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது இந்த மாதிரி வீடுகளை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை நிரூபிக்கிறது.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்த வீட்டுத் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts