பொருட்களின் விலையை குறைத்து சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை

சம்பளத்தை அதிகரித்து, பொருட்களின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜாதிக சேவக சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று (25) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் ​போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் முதலீடுகள், உற்பத்திகள், வர்த்தகங்கள் போன்றவற்றை மேலும் மேம்படுத்தி அவற்றின் நன்மைகள், மக்களுக்கு வழங்கப்படும். உழைக்கும் மக்களின் வாழ்க்கை சுமையை குறைக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி தலைமையில் நல்லாட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கையர்கள் ஒவ்வொருவருக்கும் 40 ஆயிரம் ரூபாவை அடிப்படைச் சம்பளமாக பெறக்கூடிய பொருளாதார கட்டமைப்பை ஏற்படுத்துவது அவசியமாகும். மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெறும் சம்பளத்துக்கு அமைவாக இலங்கையையும் தரமுயர்த்துவது அவசியமாகும் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வையடுத்து ஜாதிக சேவக சங்கத்துடன் தொடர்புபட்ட புஹாரி ஹோட்டலின் நிர்வாகக் கட்டடத் தொகுதியையும், பிரதமர் திறந்து வைத்தார்.

Related Posts