பொருட்களின் விலைகளை படிப்படியாகக் குறைக்க எதிர்பார்ப்பு!!

அரசாங்கம் கொண்டு வரவுள்ள நிதிக் கொள்கையின் ஊடாக பொருட்களின் விலைகளை படிப்படியாகக் குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் குறைந்துள்ளதாலேயே எதிர்வரும் காலங்களில் பொருட்களின் விலையில் துரிதமான வீழ்ச்சியை காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Posts