பொருட்களின் விலைகளை அவதானித்து கொள்வனவு செய்யுமாறு அறிவுரை

நிர்ணய விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்வதை அவதானித்து பொருட்களைக் கொள்வனவு செய்யுமாறு நுகர்வோருக்கு யாழ்.பாவனையாளர் அதிகார சபை அறிவித்துள்ளது.யாழில் நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

வர்த்தகர்களிடம் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் விற்பனை விலைக்கு மேலதிகமாக ஒரு ரூபாவும் கொடுக்க வேண்டாம் எனவும் அவ்வாறு குறித்த விற்பனை விலைக்கு கூடுதலாக விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts