பொய் சொல்லாமல், பெரிய ஜாம்பவனாக வாழ்ந்தவர் சோ : ரஜினிகாந்த்

நடிகரும் பிரபல பத்திரிக்கையாளருமான சோ. ராமசாமி இன்று சென்னையில் காலமானார். சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.

rajini-choramaswamy

அவரது உடலுக்கு பல அரசியல் பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் அரசியல் ஆசானாக விளங்கியவர் சோ.

சோ வின் நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று திரு. சோ-வின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவர் பேசும்போது, ”1978-ஆம் ஆண்டிலிருந்து எனக்கு சோ நல்ல நண்பர். சென்னையில் இருந்தால் கண்டிப்பாக வாரத்திற்கு ஒருமுறையாவது அவரை சந்திப்பேன்.

பத்திரிகை துறையில் பெரிய ஜாம்பவானாக திகழ்ந்தவர். பொய் சொல்லாமல், யாருக்கும் பயப்படாமல் வாழ்ந்தவர். அவர் பொய் சொல்லி இதுவரை நான் கேள்விப்பட்டது இல்லை. அவரது நட்பு வட்டாரம் தமிழகம் மட்டுமல்ல, டில்லி வரை வளர்ந்து கிடந்தது. மொராஜி தேசாய், வாஜ்பாயிலிருந்து இப்போது மோடி வரை அவருக்கு நன்கு பழக்கமானவர்கள். இவ்வளவு பெரிய மனிதரின் இழப்பு சாதாரணமானது இல்லை.” என்று கூறினார்.

அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தின் இரண்டு பெரிய ஜாம்பவான்கள் இறந்திருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts