அனுராதபுர விமானபடை தாக்குதல் வழக்கு தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பயங்கரவாத சட்டத்தின்கீழ் அனுராதபுர சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவரை சிறைக்குள்ளே சிறைவைத்து இம்சைபடுத்துவதாக தெரிவிக்கபடுகிறது.
கடந்த 2009 ஆண்டு பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த ராசவல்லவன் என்பவருக்கு எதிராக கடந்த 2008 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அனுராதபுர விமானபடை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புள்ளதாக தெரிவித்து அனுராதபுர விசேட மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருக்கின்றது.
இந்தநிலையில் குறித்த அரசியல் கைதி சிறையில் இருந்து தப்பிச்செல்ல திட்டம் இட்டு இருப்பதாக போலி குற்றசாட்டை முன்வைத்து சாதாரணமாக ஒரு கைதிக்கு இருக்கக்கூடிய அனைத்து உரிமைகளும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக சிறைசாலைகுள்ளே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பூட்டிய சிறிய அறைக்குள் தனிமையில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அதுதவிர நீண்டகாலமாக பெற்றோர் உறவினரை பார்க்காமல் இருந்த தமது மகனை உறவினர் சந்திப்புக்கு யாழ்ப்பாண சிறைசாலைக்கு கொண்டுவந்த போதும் யாழ்ப்பாண சிறைசாலை நிர்வாகத்தினர் அவரை ஏற்காது திருப்பி அனுப்பியுள்ளனர். இது தொடர்பில் யாழ் மனித உருமை அலுவலகத்திடமும் சிறைசாலை ஆணையாளரிடமும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமும் பெற்றோர் முறை இட்டபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
மூன்று வருடங்களுக்கு மேலாக குறுகிய அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டுள்ள தனது மகன், உடல் உள ரீதியாக பாரிய தாக்கம் அடைந்துள்ளதாகவும் பெற்றோர் கலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை வயது முதிர்ந்த எம்மால் அடிக்கடி அனுராதபுர சிறைசாலைக்கு சென்று பார்க்கமுடியாதுள்ளது அதற்கான வசதி வாய்ப்புகளும் எம்மிடம் இல்லை என்றும் வேதனை வெளியிட்டுள்ள பெற்றோர், நீண்டகாலம் சிறை வைக்கப்படிருக்கும் தமது பிள்ளை நல்லாட்சிலேனும் விடுதலை பெற்று வீடு வருவான் என்று எண்ணிய தமக்கு பெரு ஏமாற்றமே என கூறியுள்ளனர். இத்தகைய கொடுமையான செயற்பாடுகள் திட்டம் இட்ட பழிவாங்கலான செயற்பாடு என கூறும் அவர்கள் இவ்விடயத்தில் சம்மந்தப்பட்ட துறையினர் துரிதகவனம் செலுத்தி உடனடி தீர்வினை எட்டவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.