பொய்க்கடிதங்களை வழங்கிய அதிபர், வலயப்பணிப்பாளர்கள் மீது விசாரணை!

வடக்கு மாகா­ணத்­தில் தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கக் கட­மை­யாற்­றா­த­வர்­களை, தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கக் கட­மை­யாற்­று­கின்­ற­னர் என்று போலி­யான உறு­திப்­பத்­தி­ரங்­களை வழங்­கிய பாட­சா­லை­க­ளின் அதி­பர்­க­ளும், அதனை உறு­திப்­ப­டுத்­தி­ய­வ­ல­யக் கல்­விப் பணிப்­பா­ளர்­க­ளும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­னர்.

விரை­வில் இந்த விசா­ரணை நடத்­தப்­ப­டும் என்று வடக்கு மாகாண க் கல்வி அமைச்­சின் செய­லா­ளர் இ.இர­வீந்­தி­ரன் தெரி­வித்­தார். தகு­தி­யற்ற தொண்­டர்­க­ளுக்கு உறு­திப்­ப­டுத்­தல் கடி­தம் வழங்­கிய அதி­பர்­க­ளுக்­கும் அதனை உறு­திப்­ப­டுத்­திய வல­யக் கல்­விப்­ப­ணிப்­பா­ளர்­க­ளுக்­கும் எதி­ரா­க­ உரிய நடை­மு­றை­க­ளின் பிர­கா­ரம் திணைக்­கள ரீதி­யி­லான விசா­ரணை நடத்­தப்­ப­டும்.

நிய­ம­னம் வழங்­க­லில் உள்ள விதி­மு­றை­க­ளில், தொண்­ட­ரா­சி­ரி­யர்­கள் 2011 டிசெம்­பர் முத­லாம் திக­திக்கு முன்­பி­ருந்து தொடர்ச்­சி­யாகப் பணி­யாற்­றி­யி­ருக்க வேண்­டும் என்ற நிபந்­த­னை­யுண்டு. ஆனால் பலர் 2011 ஆம் ஆண்­டி­லேயே உயர்­த­ரப் பரீட்­சைக்கு முதல் தட­வை­யா­க­வும், மேலும் சிலர் இரண்­டா­வது தட­வை­யா­க­வும் தோற்­றி­யுள்­ள­னர். அவ்­வா­றி­ருந்­தும் பாட­சா­லை­க­ளின் அதி­பர்­கள் உறு­திப்­ப­டுத்­தல் கடி­தம் வழங்­கி­யுள்­ள­னர். இது ஏற்­றுக்­கொள்ள முடி­யாத செயல் என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

Related Posts