பொம்மைவெளி காக்கை வெளிப்பிரதேசத்தில் குடியிருப்புக்கள் வெள்ளத்தில்!

நாவாந்துறை பொம்மைவெளி காக்கை வெளிப்பிரதேசத்தில் சரியான வடிகாலமைப்பு வசதிகள் இன்றி குடியிருப்புக்கள் வெள்ளத்தினால் பாதிக்கபட்டுள்ளன. நகரில் இருந்து ஒரு கிலோமீற்றருக்குள் மக்கள் தண்ணீரால் அவதிப்படும் காட்சி வருத்தமளிப்பதாக சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகி்றது . யாழ்ப்பாணத்தில் தொடரும் கடும் மழையின் காரணமாக இப்பிரதேசத்தில் வாழும் சிறுவர்கள் குழந்தைகள் சுகாதாரபிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இது விடயத்தில் உரிய நடவடிக்கைகனை அரசாங்க அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் யாழ் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு இது விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுகொண்டுள்ளனர்.

11693902_903484439705912_7436047471908184910_n 12190829_903484429705913_8549151971858439032_n

படங்கள் : Jestin George

Related Posts