பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்னும் பேரணியினை வரவேற்பதற்கு முல்லைத்தீவில் நாயாற்றுப் பாலத்திற்கு அருகில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் தலைமையிலான குழுவினர் தயாரான நிலையிலுள்ளனர்.
இந்நிலையில், குறித்த இடத்திற்கு முல்லைத்தீவு பொலிஸார் தடையுத்தரவுடன் வருகை தந்துள்ளனர்.
அவ்வாறு வருகை தந்த பொலிஸார் தற்போது நிலவும் கொவிட் -19 நிலைமைகளைக் காரணங்காட்டி, பேரணிகள் எதனையும் நடத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.
இருப்பினும் பேரணியினை வரவேற்பதற்காக உள்ள குழுவினர் தாம் கொவிட் -19 சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியே தாம் பேரணியை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறித்த எழுச்சிப் பேரணியை முன்னடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.