பொது மக்களின் ஊழியனாக செயற்படவே விரும்புகின்றேன். -யாழில் மைத்திரி

தமிழ்த் தேசியக் கூட்டடைப்பு எந்தவிதமான ஒப்பந்தங்கள், நிபந்தனைகள் இன்றி  எங்களுக்குஆதரவு வழங்கியுள்ளனர்.  நாம் எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும், அமைப்புக்களுடன் இரகசிய ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவுமில்லை, கைச்சாத்திடவுமில்லை. நாம் அனைவரும் மிகவும் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றோம்.என பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்றைய தினம் மாலை 4 மணியளவில் யாழ்.வருகை தந்த மைத்திரிபால சிறிசேன கிட்டுப்பூங்காவில் நடைபெற்ற பொது எதிரணியினரது பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையிலே,     போர் காரணமாக எங்களுடைய நாட்டில் இனங்கள் மத்தியில் அமைதியின்மையும்,முரண்நிலையும் ஏற்பட்டுள்ளது. இனங்களுக்கிடையில் பகைமை உணர்வு ஏற்பட்ட பின்பு அமைதி எனும் சமாதானத்தை ஏற்படுத்துவது சுலபமான காரியம் அல்ல.ஆகவே நாட்டில் அமைதியை நிலைநாட்டவே நான் துணிந்து நிற்கின்றேன்.

பொது மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகள் உண்டு குறிப்பாக இனங்களுக்கடையில் ஐக்கியம் ஏற்படுத்துவது கடினம்.     ஆகவே நான் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் நோக்குடனேயே செயற்படுவேன் .அதாவது எவ்வாறான அரசியல் கலாசாரம் என்றால் இன,மத,பேதமின்றி ஐக்கியத்தை ஏற்படுத்த முயல்வதுடன் மக்களுடைய மனங்களையும் மேம்படுத்துவேன். நாட்டை அபிவிருத்தி செய்வதாயின் அந்த நாட்டு மக்களின் பசியையும்,பட்டினியையும் போக்க வேண்டும்.

மகிந்த ராஜபக்ச அரசு தேர்தல் காலங்களில் மக்களுக்கு பலவிதமான பொருட்களை வழங்குகின்றனர் அவை தேர்தல் காலங்களில் மட்டும் தான் வழங்க முடியும்.இவ்வாறு பொருட்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றுவது மகாபாவம்.  இவ்வாறாக அபிவிருத்தி என்ற போர்வையில் ஊழல் மோசடியை செய்கிறது மகிந்த அரசு.

பகற்கொள்ளையர்கள் மகிந்தவின் நண்பர்களாக இருக்கின்றார்கள்.பாராளுமன்ற உறுப்பினர்களை,அமைச்சர்களை  பயமுறுத்தி செயலிழக்கச் செய்திருக்கிறார்கள்.அரசு கூறும் படி செயற்படாவிட்டால் உயர் பொலிஸ் உத்தியோகத்தர்களின் அனைத்து பதவி உயர்வுகள் நிறுத்தப்பட்டன.மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் பொலிஸ் உத்தியோகத்தர்களை அடக்கி, ஒடுக்கி, நசுக்கியுள்ளனர்.ஆகவே முப்படையினர் அனைவருமே ராஜபக்ச குடும்பத்தின் பகடைக்காய்களாக மாறியுள்ளனர்.

ஜனநாயகமும், சுதந்திரமும் அழித்தொழிக்கப்பட்டுள்ளது.  ஆயிரக்கணக்கான கைக்கடிகாரம், தொலைபேசி,பெண்களுக்கு புடைவைகள் போன்றவற்றை இறக்குமதி,செய்துள்ளது மகிந்த அரசு.ஆகவே மகிந்த அரசு பணத்தை கொடுத்து உங்கள் வாக்குகளை கொள்ளையிட முனைகின்றனர்.

ஆகவே இவ்வாறான அரசின் வித்தைகளை நீங்கள் நன்கு அறிந்துள்ளீர்கள்.     நான் அரச குடும்பத்தை சார்ந்தவன் அல்ல எனது தந்தை ஏழை விவசாயி. உண்மையில் நான் வாக்குக்கோருகின்றேன் ஏன்?,மகிந்த ராஜபக்ச மாதிரி சொகுசு வாழ்க்கை வாழ வாக்குக் கேட்கவில்லை .நான் அரசனாக செயற்படப் போவதில்லை. பொது மக்களின் ஊழியனாக செயற்படவே விரும்புகின்றேன்.

நான் ஜனாதிபதியாக பதவியேற்றதும் .நிறைவேற்று  ஜனாதிபதி அதிகாரத்திற்கிருக்கக்கூடிய  அதிகாரத்தை நான் ஏனைய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிப்பேன்..அத்துடன் பாராளுமன்றத்திற்கு அதிகமானஅதிகாரங்களை கொடுத்து அதனை வலுப்பெறச்செய்வேன். இன்று பேரளவில் தான் அமைச்சரவை இருக்கின்றது.அந்த  அமைச்சரவைக்கு  உண்மையான அதிகாரத்தை வழங்குவேன்.நீதிமன்றத்திற்கு மிகுந்த வலுவையை ஏற்படுத்துவேன்.

எதிர்காலத்தில் மகிந்த அரசு நம்மீது சேறுபூசுவதற்காகவும்,உங்களுக்கும் போலியான ஆவணங்களை வெளிப்படுத்தவும் முற்படுகின்றது.அதனை கண்டு ஏமாற வேண்டாம்.     மேலும் நாட்டு மக்களிடம் ஒன்று கோருகின்றேன். எந்த கட்சிகளிடமோ அல்லது தனிநபரிடமோ இரகசிய ஒப்பந்தகளும் கைச்சாத்திடவில்லை .நாம் தேசிய இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை உருவாக்குவதுடன் நாட்டில் அமைதியை ஏற்படுத்த மக்களின் ஊழியனாக செயற்படவே விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts