பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் இலக்கங்களை குறித்துக்கொள்ளுமாறு பயணிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்மூலம் குறித்த வாகன சாரதிகளுக்கும் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்க முடியும் என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனைத்து ஆடைத் தொழிற்சாலை உள்ளடங்களான அனைத்து நிறுவனங்களிலும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையேனும் தொழிற்சாலை ஊழியர்களில் ஒரு பகுதியினருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெருமளவான ஊழியர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல்வேறு தொழிற்சாலை ஊழியர்கள் ஓரிடத்தில் தங்கியிருப்பார்களாயின் அது குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வெவ்வேறு தொழிற்சாலைகளுக்கு தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.