பொது நலன் வழக்கு மூலம் என்னுடைய தலைமையை பற்றி முடிவு செய்யலாம்: தோனியின் கிண்டல்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. மேக்ஸ்வெல் 83 பந்தில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்களடன் 96 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

போட்டிக்குப் பின் பேசிய இந்திய அணி கேப்டன் டோனி கூறியதாவது:

”மோசமான பீல்டிங் காரணமாகவே இந்த போட்டியில் தோல்வியை தழுவினோம். குறைந்தது மூன்று பவுண்டரிகளையாவது எளிதாக தடுத்து இருக்க முடியும். இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

அறிமுக போட்டியில் விளையாடி ரிஷி தவன் மற்றும் குர்கிரத் ஆகியோர் சிறப்பாகவே பந்து வீச்சினர். எனினும், மற்றொரு இளம் வீரரான ஷரன் இன்று நன்றாக வீசவில்லை. இதனால் பவுலர்களை மாற்றுவதில் சிரமமாக இருந்தது” என்று கூறினார்.

தோனியிடம் அவரது கேப்டன்சீப் பற்றி கேள்வி எழுப்பிய போது

”என்னுடைய தலைமை செயல்திறன் பற்றி நான் ஆய்வு செய்தால் அதில் சொந்த விருப்பு வெறுப்புகள் இருப்பதாக குற்றசாட்டு எழும். எனவே ஒரு பொது நலன் வழக்கு மூலம் என்னுடைய தலைமை செயல் திறன் பற்றி முடிவு செய்யலாம்” என்று கிண்டலாக பதில் அளித்தார்.

Related Posts