பொது நடத்தை, மக்களுக்கு சீனாவில் அரசு பயிற்சி

சீனத்தலைநகர் பீஜிங்க் நகரவாசிகள் பொதுவெளியில் நடந்துகொள்ளும் முறைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரச அதிகாரிகள் பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.

beijing_afp_nocredit

புகைபிடிப்பது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது மற்றும் வரிசையில் நிற்காமல் முண்டியடித்துக்கொண்டு செல்வது போன்ற பழக்கங்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் இறுதியில் பீஜிங்கில் நடக்கவிருக்கும் ஏபெக் என்றூ ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் ஆசியபசிபிக் நாடுகளின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கான உச்சிமாநாட்டை ஒட்டி இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கு முன்பு சீனாவில் நடந்த 2008 ஆண்டைய ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட மிகப்பெரிய சர்வதேச நிகழ்வுகளை ஒட்டி இதே போன்ற முன்னெடுப்புக்களை சீன அரசு முன்பு செய்திருந்தது.

பீஜிங்க் நகரத்தில் நாகரிகமான, ஒழுங்கான, நட்பு ரீதியிலான போக்குவரத்தை ஊக்குவிப்பதே தற்போதைய முன்னெடுப்பின் நோக்கம் என்று பீஜிங் நகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை தெரிவிக்கிறது.

நவம்பரில் நடக்கவிருக்கும் ஏபெக் மாநாட்டில் இருபதுக்கும் அதிகமான நாட்டுத்தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

Related Posts