ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இச்சந்திப்பு நடைப்பெற்றுள்ளது.
இதன்போது எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய இருகட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் கலந்துகொண்டிருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடன் விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.