பொது எதிரணி தேர்தல் பிரசார மேடை மீது துப்பாக்கிச் சூடு: மூவர் காயம்!

இரத்தினபுரி, நிவித்திகலவில் எதிர்கட்சியினரின் தேர்தல் பிரசாரமேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த மூவரும் இரத்தினபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும்,பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts