பொது எதிரணியில் 35 அமைப்புக்கள்; உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது

பொது எதிரணிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பு விகாரமகாதேவி திறந்தவெளியில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது.

1

2

அரசியல் கட்சிகள், சிவில் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களென 35 அமைப்புகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடவுள்ள 35 அமைப்புகளில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (சந்திரிகா பிரிவு), ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயக கட்சி, புதிய சிஹல உறுமய, மௌபிம ஜனதா பெரமுன, தேசிய ஐக்கிய முன்னணி, உட்பட 20 கட்சிகள் அடங்குகின்றன.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருகின்றன.

இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர்.

Related Posts