பொதுச்சொத்துக்கள் பொது இடங்களில் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் வீதிகளின் ஓரங்களில் நிழல்தரும் மரங்களில் விளம்பரத் தகடுகளை ஆணிகளைப் பாவித்துப் பொருத்துதல் என்பன யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (01.01.2017) முதல் தடைசெய்யப்படவுள்ளதாக ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார்.
சுவரொட்டிகளை விளம்பர நோக்கத்துக்காகவும் அறிவுறுத்தல் நோக்கத்துக்காகவும் காட்சிப்படுத்தவிரும்புவோர் இரண்டுக்கு மேற்படாத சுவடிரொட்டிகளை யாழ்.மாநகரப் பகுதிகளில் நிறுவியுள்ள விளம்பரப் பலகைககளில் மாத்திரம் காட்சிப்படுத்த முடியும்.
மேலும் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவோர் தங்களது சொந்த ஆதனங்களில் காட்சிப்படுத்துவதற்குத் தடை எதுவுமில்லை மற்றையவர்களது ஆதனங்களில் காட்சிப்படுத்துவது தவிர்க்கப்படல் வேண்டும். பாதாகை அல்லது தொங்கு பதாகை வடிவில் காட்சிப்படுத்த விரும்புவோர் யாழ்.மாநகர சபையின் அனுமதியுடன் காட்சிப்படுத்த வேண்டும்.
இத்தகைய நடமுறைகளை மீறி சுவரொட்டி விளம்பரங்களை வீதிக்குறியீடுகளில் பொதுச்சொத்துக்களில் காட்சிப்படுத்த முற்பட்டால் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.