நடைபெற்றுவரும் 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒரு தடவைக்கு மேல் தோற்றுபவர்கள் பொது அறிவுப் பரீட்சையில் முன்னைய ஆண்டில் 30 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெற்றிருந்தால் இம்முறை அந்தப் பாடத்துக்கான பரீட்சைக்குத் தோற்றவேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
பரீட்சைகள் ஆணையாளர், சனத் பூஜித விடுத்துள்ள ஊடக அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இலக்கம் -12 பாடத்திட்டத்துக்கு அமைவாக பொது அறிவுப் பரீட்சைக்கு விண்ணப்பத்திருக்கும் விண்ணப்பதாரிகள் இதற்கு முன்னைய வருடங்களில் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையில் அந்தப் பாடத்துக்கு தோற்றி 30 புள்ளிகள் அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றிருப்பின் அந்த வினாப்பத்திரத்துக்கு மீண்டும் தோற்றவேண்டியது அவசியம் இல்லை என்று இத்தால் அறியத்தருகின்றேன்.
அதற்கு அமைவாக அடுத்த வருடம் பல்கலைக்கழக அனுமதிக்கு மேற்குறிப்பிட்ட படியான புள்ளிகள் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றும் அனேகமான பரீட்சாத்திகளில் வேண்டுதலுக்கு அமைவாக இந்த அறிவித்தலானது வெளியிடப்படுகின்றது என்பதனை தாழ்மையுடன் கவனிக்குக – என்றுள்ளது.