பொதுமக்கள் எதிர்ப்பால் திறப்பு விழா நிறுத்தம்

முல்லைத்தீவு, விசுவமடு விவசாயிகள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கித் திறப்பு விழா பொதுமக்களின் எதிர்ப்பால் செவ்வாய்க்கிழமை (10) கைவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் பொதுத்தேவைக்கென கடந்த 1977ஆம் ஆண்டு ஒதுக்கிய 6 ஏக்கர் காணியை, கடந்த 2011ஆம் ஆண்டு விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவு சங்கம் அத்துமீறி அபகரித்துள்ளதாகவும் இதனை மீட்டுத்தருமாறு வள்ளுவர்புரம் கிராமிய அபிவிருத்திச் சங்க நிர்வாகம் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனாதிபதி, காணி ஆணையாளர், வடக்கு மாகாண சபை, மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் ஆகியோர் உட்பட பதினொரு பேருக்கு மகஜர் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த காணியில் அமைக்கப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிராமிய வங்கியை செவ்வாய்க்கிழமை (10) திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அறிந்து வங்கியின் முன்னால் கூடிய பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எனவே, அவ்விடத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் திறப்பு விழாவும் இடைநிறுத்தப்பட்டது.

Related Posts