பொதுமக்களுக்கு தேர்தல் திணைக்களம் முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் வாக்காளர்கள் தமது வாக்குரிமை பத்திரத்தை பூரணப்படுத்தி கிராம சேவையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென தேர்தல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலின்போது தமது வாக்குரிமையை உறுதிசெய்யும் பொருட்டு குறித்த வாக்குபத்திரத்தை விரைவாக பூரணப்படுத்தி கையளிக்குமாறு தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட காலப்பகுதியில் வாக்காளர் பதிவேற்றில் பெயரை பதிவுசெய்ய முடியவில்லையெனின் இவ்விடயம் தொடர்பாக கிராம சேவையாளர்கள் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அறிவித்து வாக்காளர் பதிவேற்றில் பெயரை பதிவுசெய்ய முடியுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts