பொதுநலவாய மாநாட்டுக்கு செல்லமாட்டேன்: சி.வி.விக்னேஸ்வரன்

‘பொதுநலவாய மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் செல்லமாட்டேன்’ என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

vicknes-waran-maviddapuram-2

வலி. வடக்கில் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும், வீடழிப்பினைத் தடுத்து நிறுத்தக் கோரியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் பேராட்டத்தின் இரண்டாவது நாளில் (13) கலந்துகொள்ள வந்த முதலமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே எடுத்த முடிவுக்கு அமைவாக கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை’ என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்தார் வடமாகாண முதலமைச்சர்!

Related Posts