இந்த ஆண்டின் பொதுநலவாயப் போட்டிகள் இந்தியாவின் புனே நகரில் நடைபெற்று வருகின்றன. 64 நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற 17வயதுக்கு உட்பட்ட பளுதூக்கலில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்த யாழ். மத்திய கல்லூரி மாணவன் எஸ்.விஸ்ணுகாந் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக 227 கிலோ பளுவைத்தூக்கியே விஸ்ணுகாந் இந்தச் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
பொதுநலவாயப் போட்டிகளில் கனிஸ்ட பிரிவு பளு தூக்கலில் இலங்கையின் உயர்மட்டப் பெறுபேறாக இருந்த 225 கிலோ விஸ்ணுகாந் மூலமாக 227 கிலோவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவருக்கான பயிற்சிகளை யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவன் ஏ.விதன் வழங்குகிறார்.
வெண்கலப் பதக்கம் பெற்றுச் சாதித்த வேம்படி மாணவி
19வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பளுதூக்கல் நேற்று நடை பெற்றது. இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்த வேம்படி மகளிர் கல்லூரி மாணவி ஜே.டினோஜா வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
64 நாடுகள் கலந்துகொண்ட இந்தப்போட்டியில் 126 கிலோ எடையைத் தூக்கியே டினோயா வெண்கலம் வென்றார். இதன்மூலம் பொதுநலவாயப் போட்டிகளில் பதக்கத்தை வென்ற முதல் தமிழ் மாணவி என்கின்ற சாதனையையும் அவர் நிலைநாட்டியுள்ளார்.