பொதுத் தேர்தலை ஒத்திவைப்பதா இல்லையா? – மார்ச் 25இல் தீர்மானம்

பொதுத் தேர்தலை திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா தொடர்பில் மார்ச் 25ஆம் திகதி முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வேட்புமனுக்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னர் தேர்தல் திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உண்டு என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை குறைந்தது இரண்டு வாரங்களுக்கே ஒத்திவைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அரசியல் கட்சிகள் சில தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரியுள்ளன. அவற்றில் சில தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இதுதொடர்பில் தமது கோரிகையை முன்வைத்துள்ளன.

Related Posts