பொதுத்தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன!

நடைபெறவுள்ள பொதுதேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இன்று(வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், எவ்வாறான காரணங்களுக்காகவும் தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts