பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கான ஒன்பது உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது நியமனம் வழங்கினார்.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சத்யா ஹெற்றிகே தலைமையிலான இந்த ஆணைக்குழு உறுப்பினர்கள் அடுத்த மூன்று வருடங்களுக்குப் பதவியில் இருப்பர்.
ஏனைய 8 உறுப்பினர்களினதும் விவரம் வருமாறு:- எஸ்.ஸி.மனம்பெரும, ஆனந்த செனிவிரட்ன, என்.எம்.பத்திரன, எஸ்.தில்லைநடராஜா, ஏ.முஹமட் நஹ்யா, காந்தி விஜேதுங்க, சுனில் எஸ்.ஸ்ரீசேன, வைத்திய நிபுணர் ஐ.என்.சொய்ஸா.