பொதுச்சந்தைக் காணியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறினர்

முல்லைத்தீவு, புதுகுடியிருப்பு நகரப்பகுதியில் உள்ள பொதுச்சந்தைக்குரிய காணியில், கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் நடத்தி வந்த சிறு வர்த்தக நிலையம், தேனீர் சாலை மற்றும் இலவச திரையரங்கு என்பவற்றை, அங்கிருந்து இராணுவத்தினர் அகற்றியுள்ளனர்.

இந்தத் திரையரங்கு, வர்த்தக நிலையம் என்பன கடந்த புதன்கிழமை (05) அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது,

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2009ஆம் ஆண்டு முதல், புதுகுடியிருப்பு நகர்ப்பகுதியில் உள்ள நான்கு சந்திப் பகுதிக்கு அண்மையாக, பொதுச் சந்தைக்குரிய காணியில் நீண்ட நாட்களாக இராணுவத்தினர் இலவச திரையரங்கு ஒன்றையும, தேனீர் சாலை, சிறு வர்த்தக நிலையம் என்பவற்றை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையிலேயே, படையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

Related Posts