யாழ்.நகரிலுள்ள தனியார் நிறுவனங்களினூடாக பொதிகளை பரிமாறுவதில் தவறுகள் இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் முறையிட்டுள்ளனர் என யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் மாவட்ட இணைப்பதிகாரி வசந்தசேகரன் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அண்மையிலும் இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவ்விரண்டு முறைப்பாடுகளும் யாழ்.நகரிலுள்ள தனியார் பொதிகள் சேவைகள் மீதே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த வகையில் யாழிலிருந்து ஜேர்மனுக்கும், யாழிலிருந்து இத்தாலிக்குமான இரண்டு பொதிகள் பரிமாறுவதில் இத்தவறுகள் ஏற்பட்டுள்ளது.
எனினும் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் ஒன்று இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் மற்றைய முறைப்பாடு தொடர்பில் இன்றைய தினம் முழுமையான தகவல் வழங்கப்பட வேண்டும் என குறித்த நிறுவனத்திடம் எம்மால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதனை மீறும் பட்சத்தில் அதற்குரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.