பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆவது ஆண்டு நிறைவு: யாழ்.பல்கலையில் நிகழ்வு

பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 2001ஆம் ஆண்டு பொங்கு தமிழ் நடத்தப்பட்டது.

இதன்போது, தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டுமென பிரகடனம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த பிரகடனத்தின் 19ஆவது ஆண்டான இன்று அந்த பிரகடனம் நிறைவேற்றப்பட வேண்டுமென மாணவர்களால் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக துறைசார் தரப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts