சூரியனுக்கு நன்றி செலுத்தும் உழவர்களின் விழாவான தைப்பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு பொங்கல் கலை விழா யாழ் கல்வியியற் கல்லூரியில் 14ம் திகதி நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்கள். யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைவர் லலித் பியூம் பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். யாழ் கல்வியியற் கல்லூரி பீடாதிபதி எஸ்.யோகராஜன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
உழவர் சமுதாய கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் கிராமிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி என்பன நடைபெற்றன.
உலகத்தின் சகல சக்திகளுக்கு மூலமாகவுள்ள சூரியனுக்கு ஆளுநர் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலில் வட மாகாணம் பல துறைகளில் முன்னேறிவருவதாக ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். வட மாகாண மக்கள் உண்மையான சமாதானத்தினை தற்போது அனுபவிக்கின்றனர். ஜனாதிபதியின் சிறந்த தலைமைத்துவம் நாட்டினை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்கின்றது.
கலை ஆவலர்கள், கல்வி சார் உயர் அதிகாரிகள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.