பொக்கோ இயந்திரம் மோதியதில் மாணவன் பலி!

கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் பாடசாலை மாணவர் ஒருவர் பலியானார்.

சம்பவத்தில் மற்றுமொரு மாணவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொக்கோ (JCB) இயந்திரம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து மாணவர்கள் மீது புரண்டுள்ளது.

இதன்போது அனர்த்தத்தில் சிக்கிய மாணவர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் பலியானவர் முழங்காவில் மகாவித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும் உதயகாந்தன் பிரசாத் என்ற மாணவர்  என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முழங்காவில் காவல்துறை முன்னெடுத்துள்ளது.

Related Posts