பைரவா படத்தில் பிரம்மாண்டமான திருவிழாப்பாடல்

விஜய் நடிக்கும் பைரவா படம் பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டதால் படத்தின் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரசாத் லேப் வளாகத்தில் கோயம்பேடு பஸ்நிலையம் போன்ற செட் போடப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

அதன் பிறகு ராஜமுந்திரியில் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

தற்போது பைரவா படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

சென்னையில் உள்ள பின்னி மில்லில் பிரம்மாண்ட கோயில் செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அந்த செட்டில் திருவிழா பாடல் ஒன்றை படமாக்க உள்ளனர்.

இந்தப் பாடலை படு பிரம்மாண்டமாகவும், கலர்ஃபுல்லாகவும் எடுக்க திட்டமிட்டுள்ளார் பரதன். ‘பைரவா’ படத்தில் இடம்பெற உள்ள இந்த திருவிழா பாடல் படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவாகியிருக்கும் இப்பாடலில் விஜய், கீர்த்தி சுரேஷ் உடன் மற்ற முக்கிய நட்சத்திரங்களும் நடக்கின்றனர்.

Related Posts