பைரவா படத்தின் கதை கறுப்பு பணத்தை ஒழிப்பதா?

கறுப்பு பணத்தை ஒழிப்பது குறித்து, இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், விஜயின் பைரவா படத்தின் கதையும், கறுப்பு பணம் ஒழிப்பதை மையமாக வைத்து தான், தயாராகி உள்ளதோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டிரெய்லரில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பது தான், இந்த எதிர்பார்ப்புக்கு காரணம். இந்த படத்தின் பாடல் காட்சிகளிலும், சில வித்தியாசங்களை பார்க்க முடிந்தது. விஜய், வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து, கீர்த்தி சுரேஷுடன் டூயட் பாடி, அசத்துவது போன்ற காட்சியும், டிரெய்லரில் உள்ளது.

படம் பொங்கலுக்கு வெளிவரும் நிலையில், தமிழர்களின் கலாசாரத்தை விளக்கும் வகையில், வேட்டி – சட்டை அணிந்து, பாடல் காட்சிகளில் விஜய் நடித்துள்ளதாக, அவரது ரசிகர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

Related Posts