பைரவாவை பார்த்துட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

‘தெறி’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடித்துள்ள பைரவா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.பைரவா திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதால்,படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் படத்தின் “ரஃப் கட்” காட்சிகளை பார்த்த இளைய தளபதி விஜய்,இயக்குநர் பரதனை பாராட்டியுள்ளார்.”என்கிட்ட சொன்னதுக்கு மேலயே செஞ்சுருக்கிங்க..உங்க கடுமையான உழைப்புக்கான மரியாதை பைரவா காட்சிகளை பார்த்தாலே தெரியுது.”என இயக்குநர் பரதனை மனம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார் விஜய்.இதனால் இயக்குநர் பரதன் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளாராம்.

சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட பைரவா டீசர் சமூக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பியது.அதே போல படமும் பட்டையை கிளப்பும் என விஜய் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.விஜயின் வாக்கு பலிக்கிறதா? என்பது வரும் பொங்கலன்று தெரிந்துவிடும்.

Related Posts